இலங்கை

கைரேகை அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டு 59 பேர் கைது

கைரேகை அடையாளத்தை அடிப்படையாக கொண்டு தேடப்பட்ட 59 குற்றவாளிகள் 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனூடாக 103 குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய, இதுவரை பொலிஸில் சரணடையாத குற்றவாளிகளே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் வழிகாட்டலின் கீழ் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு குற்றப்புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டுவந்த 56 பேரும் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 81 பேரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 123 பேரும் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 211 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.