Breaking News

கைது செய்யப்பட்ட பெண் காவலாளியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

கைது செய்யப்பட்ட அனுராதபுரத்தில் உள்ள அவன்தி தேவி பெண் சிறுவர்கள் காப்பகத்தின் தலைமை பெண் காவலாளியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த பெண் காவலாளியை எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த காப்பகத்தில் சிறுவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த தினங்களில் அத தெரண “உகுஸ்ஸா” நிகழ்ச்சியின் ஊடாக தெரியப்படுத்தியதை அடுத்து குறித்த பெண் காவலாளி நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.