இலங்கை

கைதிகளுக்கும் வாக்களிப்பு வேண்டும் – நாளை நீதிமன்றில் மனுத் தாக்கல் !

சிறைக்கைதிகளுக்கும் வாக்களிப்பதற்கான உரிமை வழங்குவதற்கான சட்ட அனுமதியைக் கோரி சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவினர் நாளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றினைத் தாக்கல் செய்யவுள்ளனர்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த இக்குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக்க பெரேரா – தற்போது 5 லட்சம் சிறைக்கைதிகள் உள்ளனர் என்றும் இவர்களில் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்படுபவர்கள் ஒரு பிரிவினராகவும் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மற்றொரு பிரிவினர் என்று இரு பிரிவினராக உள்ளனர். இவர்களுக்கு கட்டாயம் வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்றார்.

இதேவேளை தமிழ் அரசியற் கைதிகளுக்கும் இந்த உரிமை நிச்சயம் வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.