Breaking News

கைதான பளை வைத்தியர் குறித்து தீவிர விசாரணை

பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட பளை வைத்தியசாலை பொறுப்பதிகாரி மருத்துவர் சின்னையா சிவரூபன் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த வைத்தியர் சட்டவிரோதமான முறையில் தன்வசம் ஆயுதம் வைத்திருந்தார், தமிழீழ விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கத்திற்கான பிரதான செயற்பாடுகளில் ஈடுபட்டார் மற்றும் பிரமுகர் ஒருவரை கொலை செய்ய திட்டம் வகுத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார் பொலிஸ் தரப்பால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.