Breaking News

கைக்குண்டு வைத்திருந்த குற்றத்திற்காக யாழில் இளைஞர் கைது !

 

-யாழ்.செய்தியாளர் –

யாழ்ப்பாணத்தில் கைக் குண்டு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – இராசாவின் தோட்டம் பகுதியில் வைத்தே நேற்றிரவு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

19 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தே நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.