இலங்கை

கே. பி பாணியில் மதுஷை கொண்டுவர அரசு இரகசிய நடவடிக்கை ! மாரப்பன முக்கிய பேச்சுக்களில்..

விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பியை கொண்டுவந்தது போல டுபாயில் கைது செய்யப்பட்டிருக்கும் மாக்கந்துர மதுஷை விசேட பாதுகாப்புடன் இலங்கை கொண்டுவர முயற்சிகளை எடுத்திருக்கிறது இலங்கை அரசு.

இதற்காக டுபாய் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் மாரப்பன அங்கு முக்கிய பிரமுகர்களை சந்தித்துள்ளார். அதேசமயம் மதுஷை இலங்கை அரசிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி மைத்திரியின் வேண்டுகோள் அடங்கிய கடிதத்தையும் வெளிவிவகார அமைச்சர் அங்கு ஒப்படைத்திருக்கிறார்.

கைதிகளை பரிமாற்றம் செய்யும் ஒப்பந்தத்தினை டுபாயுடன் இலங்கை அரசு செய்யாத காரணத்தினால் மதுஷை இலங்கையிடம் ஒப்படைக்க விசேட ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அதனை செய்ய இலங்கை அரசு தயாராகி வருகிறது.

டுபாயில் இருந்து வேறு நாட்டுக்கு மதுஷ் தப்பியோடிவிடாமல் இருக்க அவரை விசேட பாதுகாப்புடன் இலங்கை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ள அரசு அவருடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் யார் என்பதையும் அவரிடம் இருந்தே அறிய முயல்வதாக தகவல்..!