உலகம்

கென்ய மண்சரிவிற்கு 60 பேர் பலி

கென்யாவின் மேற்கு போகொட் பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காணாமல் போனவர்களை தேடும் பணிகள் துரிதப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழப்பு 53ஆக உயர்ந்துள்ளதோடு, 6 பேர் சேற்றுக்குள் சிக்கியுள்ளதாக, அந்த மாகாண நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேற்கு போகொட்டில் கிராமங்களில் பெரும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதோடு, தொடரும் கடும் மழையால் அண்டை நாடுகளான உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

மண் மற்றும் பிற குப்பைகளில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படும் மக்களை மீட்கும் பணிகளில் இராணுவமும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.

இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை அரசாங்கமும் பொது அமைப்புகளும்; அவசர உதவிகளை வழங்கி வருகின்றன.