இலங்கை

கூட்டமைப்பை மோடி அழைக்காமைக்கான காரணத்தை யாழில் சொன்னார் டக்ளஸ் !

“இலங்கை தமிழரின் இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியா 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் எவற்றையும் மேற்கொள்ளாது. அதனால் தான் இலங்கைக்கு வந்து சென்ற இந்தியப் பிரதமர் மோடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அழைக்கவில்லை. கூட்டமைப்பினரும் அவரை சந்திப்பதற்கான முயற்சியை எடுக்கவில்லை”

இவ்வாறு ஈழமக்கள் ஜனாநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எம் பி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் அங்கு தெரிவிக்கையில்,

இலங்கை தமிழர்களின் இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியா 13 ஆவது திருத்தச் சட்டத்தை மட்டும் முழுமையாக நடைமுறைப்படுத்தினால் போதும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது. இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை. எதிர்காலத்திலும் இதில் மாற்றங்கள் ஏற்படாது. அண்மையில் கூட ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடா்பான இனப்பிரச்சினை விடயத்தில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துங்கள் என இலங்கை அரசிற்கு இந்தியா வலியுறுத்தியிருந்தது.
இந்நிலையில், இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வந்து சென்றிருந்தபோதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அவரை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு கோரியிருந்தனர். ஆனால் இதுவரையில் அதற்கான ஏற்பாடுகளும் எவையும் நடைபெறவில்லை. அதற்கு காரணம் இந்தியா 13 திருத்தச் சட்த்தை மாத்திரம் நடைமுறைப்படுத்தினால் போதும் என்ற நிலைப்பாட்டில் மிக உறுதியாக உள்ளது. அதனாலேயே மோடியும் கூட்டமைப்பினரை சந்திகக அழைக்கவில்லை.

என்றார் டக்ளஸ்