உலகம்

கூட்டணிக்கான அழைப்பை நிராகரித்தார் எதிர்க்கட்சித் தலைவர்


கூட்டணி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பிலான இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின்  அழைப்பை, நீல மற்றும் வெள்ளை கட்சித் தலைவர், பென்னி கண்ட்ஸ் நிராகரித்துள்ளார்.

இஸ்ரேலில் கடந்த ஐந்து மாதங்களில் இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சியும் தனிப்பெரும்பான்மையை பெறவில்லை.

தேர்தல் முடிவுகள் எந்த ஒரு தரப்பும் தனித்து ஆட்சியமைக்ககூடிய வகையில் தெளிவான வெற்றியை வழங்கவில்லை.

எனினும் கூட்டணி அமைப்பது தொடர்பிலான இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின்  அழைப்பை, பென்னி கண்ட்ஸ் நிராகரித்துள்ளார்.

இஸ்ரேலில் அமைக்கப்படும் கூட்டணி அரசாங்கத்தில் தான் பிரதமராக பதவி வகிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

97 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், காண்ட்ஸ் தலைமையிலான  கட்சிக்கு 33  ஆசனங்களும், நெட்டன்யாகுவின் கட்சி 31 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.

நீல மற்றும் வெள்ளை கட்சியின் மூத்த  தலைவர் மோஷே யலோன் கருத்து வெளியிடுகையில், தனது கட்சி நெட்டன்யாகு தலைமையிலான கூட்டணி ஆட்சியில் பங்கேற்கப்போவது இல்லையென தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் சிறிய கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் என கருதப்படுகின்றனது.

இந்த நிலையில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான பேச்சுக்களை நடத்தத்தயார் என எதிர்க்கட்சித் தலைவர் பென்னி கண்ட்ஸ் அறிவித்துள்ளார்.

குறிப்பாக இந்த தேர்தலில் மூன்றாவது இடத்தைப்பெற்ற மதச்சார்பற்ற தேசியவாத கட்சியான இஸ்ரேல் பீட்டெய்னுவின், தலைவர் அவிக்டர் லிபெர்மனுடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக பென்னி கண்ட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.