உலகம்

கூகுள் மேப் மூலமாக விபத்து நடந்திருப்பதை தெரிவிக்கலாம்…!

கூகுள் மேப் புதிதாக தனது செயலியில் விபத்தைப் பற்றியும் விரைந்து செல்ல முடியாத சாலைகளை பற்றியும் மற்றவர்களுக்கு தெரிவிக்கும்படியான புதிய வசதியை அறிமுகம் செய்யவுள்ளது.

 

நாம் செல்லும் பாதையில் விபத்து அல்லது விரைந்து செல்ல முடியாத நிலை இருந்தால். அதனை நாம் கூகுள் மேப் மூலமாக மற்றவர்களுக்கு தெரியப்படுத்தலாம். நேவிகேஷன் வசதியை செயல்படும்படி வைத்துவிட்டு நாம் ஒரு பாதையில் சென்றுகொண்டிருக்கும்போது அந்த பாதையில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அந்த பாதையை பயன்படுத்தும் மற்றவர்களுக்கு அதனை தெரிவிக்க கூகுள் நேவிகேஷன் பக்கத்தில் தேடல் ஆப்ஷனுக்கு கீழ் பிளஸ் குறியீடு காட்டும் அதனை தேர்வு செய்தால், அதில் இரண்டு தேர்வுகள் காட்டும். ஒன்று, விபத்து ஏற்பட்டுள்ளது. மற்றொன்று, விரைந்து செல்ல முடியாது எனும் ஆப்ஷனும் இருக்கும் அதில் எது வேண்டுமோ அதனை தேர்வு செய்ய வேண்டும். அதன்படி அந்த பாதையில் இருக்கும் பிரச்சனைக்குறித்து மற்றவர்களுக்கும் தகவல் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
map

இந்த வசதி அப்டேட் செய்யும் கூகுள் மேப்-ல் தான் வருமெனவும், அதேபோல் இன்னும் இது அதிகாரப்பூர்வமாக கூகுள் நிறுவனம் வெளியிடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் ஓலா, உபர் போன்று கால் டாக்ஸி மூலமாக அலுவலகம் செல்வோர்களும், அவசரமாக இரயில் நிலையம், விமான நிலையம் செல்வோர்களும் இந்த புதிய அப்டேட் மூலமாக விபத்து ஏற்பட்டுள்ள பாதையையும் விரைந்து செல்ல முடியாத பாதையையும் தெரிந்துகொண்டு மாற்று பாதையை உபயோக்கிக்க முடியும் அவ்வகையில் இந்த அப்டேட் வசதியாக இருக்குமென எதிர்பாக்கப்படுகிறது.