உலகம்

குவாசிம் சுலைமானி கொலை; தகவல் வழங்கிய அறுவர்ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரப் படையின் தளபதி குவாசிம் சுலைமானியை கொலை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈராக் மற்றும் சிரியாவில் இருந்து  தகவல் அளித்தவர்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

கடந்த 3ஆம் தேதி பாக்தாத் விமான நிலையத்தின் அருகே, ஆளில்லா தாக்குதல் மூலம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில், குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.

முன்னதாக அவர், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் இருந்து  ‘சாம் விங்ஸ்’ நிறுவன பயணிகள் விமானத்தில் புறப்பட்டு, பாக்தாத் வந்திறங்கினார்.

இந்த இரு இடங்களில் இருந்து  அமெரிக்காவுக்கு கிடைத்த தகவலே சுலைமானியை கொலை செய்வதற்கு உதவியாக இருந்துள்ளது.

பாக்தாத் விமான நிலைய ஊழியர்கள் 2 பேர், பொலிஸ் அதிகாரிகள் 2 பேர், ‘சாம் விங்ஸ்’ விமான நிறுவன ஊழியர்கள் 2 பேர் என ஆறு பேர் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை வளையத்தில் உள்ள 2 விமான நிறுவன ஊழியர்களில் ஒருவர் உளவாளி எனவும், மற்றொருவர் விமான பணிக்குழுவை சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.