இலங்கை

குளவி கொட்டுக்கு இலக்கான தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

 

திம்புள்ள பத்தனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ஸ்மோல் டிரேட்டன்
தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 21 ஆண் தொழிலாளர்கள் கொட்டகலை
பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார்
தெரிவித்தனர்

இந்த சம்பவம் இன்று காலை 1 1மணி அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

காயங்களுக்கு உள்ளான 21ஆண் தொழிலாளர்களும் கொட்டகலை வைத்தியசாலையில்
தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதோடு ஒருவர் மாத்திரம் கொட்டகலை
வைத்தியசாலையின் தீவிர சிக்சசை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்

திம்புள்ள பத்தன பொலிஸ் பிரிவு கொட்டகலை கே.ஓ பிரிவை சேர்ந்த 35 பெண் தொழிலாளர்கள் நேற்று  பிற்பகல் குளவி கொட்டுக்கு  குறிப்பிடத்தக்கது

(நோட்டன்பிரிஜ் நிருபர் – எம் கிிருஸ்ணா)