இலங்கை

குளவிக் கொட்டுக்கு இலக்கான 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

தலவாகலை கிறேட்வெஸ்டன் கல்பா பிரிவில் குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் 8 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை (23) 10 மணியளவில் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்தவர்கள் மீதே இவ்வாறு தேயிலை செடியினுள் இருந்த குளவிக்கூடு கலைந்து கொட்டியுள்ளது.

குளவி கொட்டுக்கு இலக்காகிய 6 பெண் தொழிலாளர்ளும் இரண்டு ஆண் தொழிலாளர்களும் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரண்டு ஆண்களும் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியதுடன் ஏனைய 6 பெண்களும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.