உலகம்

குல்புசன் யாதவின் மரண தண்டனையை மீளாய்வு செய்ய பாகிஸ்தானுக்கு உத்தரவு

 

இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கை பாகிஸ்தான் மீளாய்வு செய்ய வேண்டும் என்று, ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குல்புசான் யாதவ் என்ற குறித்த நபர், பாகிஸ்தானில் வேவு பார்த்ததாக தெரிவித்து, கடந்த 2016ம் மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார்.

இதற்கு எதிராக இந்தியா சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் அதன் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது.

குல்புசன் யாதவ் கைது செய்யப்பட்டதன் பின்னர் அவருக்கு ராஜதந்திர உதவிகளை வழங்க பாகிஸ்தான் அரசாங்கம் மறுத்துள்ளதன் மூலம், சர்வதேச சட்டத்திட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த தண்டனையை மீளாய்வு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.