இலங்கை

குற்றவியல் சட்டத்தில் புதிய திருத்தங்கள் – தயாராகிறது அரசு

 

குற்றவியல் சட்ட மற்றும் குற்ற வழக்கு ஒழுங்கு விதியில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக அரச நிர்வாகம், இடர் முகாமைத்துவம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் ஆராயப்பட்டுள்ளது.

உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிடுவது தொடர்பில் சட்ட ரீதியில் நடவடிக்கை மேற்கொள்வதற்காக குற்றவியல் நிதிச்சட்டம் மற்றும் குற்ற வழக்கு ஒழுங்கு விதிகளில் திருத்தத்தை மேற்கொள்ள இதன்படி ஏற்பாடுகள் இடம்பெறுமென சொல்லப்படுகிறது.

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் மற்றும் அரச பாதுகாப்பிற்கு தடையை ஏற்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுதல் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய வகையில் குற்றவியல் சட்ட விதிகள் மற்றும் குற்றச் செயல் வழக்கு ஒழுங்கு விதிகளில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான குழு நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கமைவாக இந்த தவறு தொடர்பில் குற்றவாளியாகும் ஒருவருக்கு ரூபா பத்து இலட்சம் வீதம் தண்டனை பணத்தை நிர்ணயிப்பதற்கு அல்லது 5 வருட காலத்திற்கு மேற்படாத சிறைத்தண்டனை விதிப்பதற்கு அல்லது 2 தண்டனைகளுக்கும் உட்பட்ட வகையில் குற்றவியல் சட்டம் மற்றும் குற்ற வழக்கு ஒழுங்கு விதியில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக இடர் முகாமைத்துவம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.