உலகம்

குற்றத்தை ஒப்புகொண்ட இஸ்ரேல் பிரதமரின் மனைவி

 

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவின் மனைவி சாரா, அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக ஒப்புகொண்டுள்ளார்.

அந்த நாட்டின் பிரதமர் இல்லத்தில் உணவு சமைப்பவர்கள் இல்லை என்று தெரிவித்து, வெளியில் உணவகங்களில் இருந்து அவர் உணவுகளைப் பெற்று 99,300 டொலர்களை செலவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பில் அவர் நீதிமன்றில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட அவருக்கு 15,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.