உலகம்

குற்றச்சாட்டை நிராகரிக்கும் நியுசிலாந்து பயங்கரவாதி

 

நியுசிலாந்தின் க்றிஸ்ட்சர்ச்சில் கடந்த மார்ச்  15ம் திகதி பள்ளிவாசல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 50க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

இதுதொடர்பாக கைதாகியுள்ள 29 வயதான சந்தேகநபர் நேற்று நியுசிலாந்து நீதிமன்றில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் முன்னிலையானார்.

இதன்போது அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுப்பதாக, அவரது சட்டத்தரணி கூறினார்.

இதனைக் கேட்டு, நீதிமன்றில் பிரசன்னமாகி இருந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் கவலையுடன் கண்ணீர் சிந்தியதாக நியுசிலாந்து ஊகடங்கள் தெரிவிக்கின்றன.

வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு மே மாதம் வரையில் பிற்போடப்பட்டுள்ளது.