Breaking News

குறைகேள் அதிகாரியாக ( ஓம்புட்ஸ்மன் ) முன்னாள் டீ ஐ ஜி விக்கிரமசிங்கவை நியமித்தார் ஜனாதிபதி !

 

ஜனாதிபதியின் கவனத்திற்காக பொதுமக்கள் சமர்ப்பிக்கும் முறைப்பாடுகளை ஆராய்ந்து உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக விசேட குறைகேள் பிரிவு ஒன்றை அமைத்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச .

இதன்படி பொதுமக்களின் குறைகேள் அதிகாரியாக ( ஓம்புட்ஸ்மன் ) முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் விக்கிரமசிங்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் முறைப்பாடுகள் – விமர்சனங்கள் குறித்து கவனத்திற்கொண்டு உடனடி நடவடிக்கைளை எடுப்பது இதன் நோக்கமாகும்.இதற்கான அலுவலகம் மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்தான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளிவரவுள்ளது.