உலகம்

குர்திஷ் படைகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை – துருக்கிப் படைகள் சிரியாவுக்குள் நுழைந்தன.

 

குர்திஷ் படைகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையில் ஈடுபட, துருக்கிப் படைகள் சிரியாவுக்குள் நுழைந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சிரியாவில் குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக துருக்கி ராணுவ நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன் காரணமாக சிரியாவின் வடக்குப் பகுதியில் அமெரிக்கா தனது படைகளை வாபஸ் பெற்றது.

சிரியாவில் தனது இராணுவ தாக்குதலை ‘விரைவில்’ தொடங்கப்போவதாக ஏற்கனவே
துருக்கி தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் குர்திஷ் படைகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையில் ஈடுபட, துருக்கிப் படைகள் சிரியாவுக்குள் நுழைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ” கிளர்ச்சிப் படைகள் மீது ராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக துருக்கிப் படைகள் சிரியாவுக்கு நுழைந்துள்ளன. இதனை துருக்கி இராணுவ அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்”

“மனிதாபிமான பேரழிவிற்கு” வழிவகுக்கும் அண்டை நாடான துருக்கியின் உடனடி இராணுவ நடவடிக்கையை “எதிர்க்க” சிரியாவின் எல்லைக்குச் செல்ல பொதுமக்களுக்கு “பொது அணிதிரட்டல்” அழைப்பை குர்திஷ்கள் வெளியிட்டு உள்ளன.

இந்த நிலையில் துருக்கியின் எல்லைப்புறத்தில் ஈரான் படைகள் இராணுவப் பயிற்சி மேற்கொண்டுள்ளன. இதன் காரணமாக ஈரான் – சிரியா – துருக்கி எல்லைகளில் பதற்றம் நிலவுகிறது.