இலங்கை

குருநாகல் டாக்டர் கைது செய்யப்பட்டமையின் பின்னணியில் அரசியல் ?

 

குருநாகல் வைத்தியசாலையில் கைது செய்யப்பட்ட வைத்தியர் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ள அக்கட்சியின் பிரமுகர்கள் இந்த கைதின் பின்னணியில் அரசியல் உள்ளதா என்றும் வினவியுள்ளனர்.

ஆரம்பத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் உறுப்பினராக இருந்த டாக்டர் ஷாபி பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டாரென சொல்லப்படுகிறது.

உள்ளூரில் எதிரான அரசியல் பிரமுகர்கள் தற்போதைய நிலவரத்தை பயன்படுத்தி அவருக்கு எதிராக செயற்படுகிறார்களா என்று கவனத்திற் கொள்ளுமாறும் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ரணிலிடம் கேட்டுள்ளனர்

( மேற்படி டாக்டர் தேர்தல் காலத்தில் வெளியிட்ட விளம்பரம் மற்றும் இனவாதத்திற்கு எதிராக அவர் வழங்கிய பத்திரிகை பேட்டி இணைக்கப்பட்டுள்ளது )