இலங்கை

குருநாகல் டாக்டருக்கு எதிராக 51 முறைப்பாடுகள் – அவரின் கருத்தடை வேலைகள் 99 வீதம் உறுதி என்கிறார் ரத்தன தேரர் !

 

குருநாகல் வைத்தியசாலையில் சிசேரியன் சிகிச்சை என்ற போர்வையில் கருத்தடை சத்திரசிகிச்சை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள டாக்டர் ஷாபி ஷிஹாப்தீனுக்கு எதிராக 51 பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவை குருநாகல் வைத்தியசாலையில் செய்யப்பட்ட முறைப்பாடுகள்.அதேபோல் மேலும் ஒரு முறைப்பாடு தம்புள்ளை வைத்தியசாலையில் பெண் ஒருவரால் செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடுகள் குறித்து விசாரணை செய்ய சுகாதார அமைச்சு குழுவொன்றை நியமித்துள்ளது.விசாரணை முடியும்வரை எதையும் கூறிவிடமுடியாதென அமைச்சர் ராஜித இன்று கூறியுள்ளார்.

அதேசமயம் இன்று குருநாகல் வைத்தியசாலைக்கு சென்ற அத்துரலியே ரத்தன தேரர் , மேற்படி வைத்தியர் செய்த வேலைகள் 99 வீதம் உறுதியாகிவிட்டதாக கூறினார். அதேசமயம் இந்த விடயத்தில் யாராவது அழுத்தங்களை வழங்கக் கூடாதென்றும் அவர் எச்சரித்தார்.

முறைப்பாடுகளை முன்வைத்த பெண்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.