விளையாட்டு

குத்துச்சண்டை மேடையில் ஒருவரை கொலை செய்ய வேண்டும் – மீண்டும் அச்சுறுத்தும் வில்டர்

அமெரிக்காவின் அதிபார குத்துச்சண்டை வீரர் டியோன்டாய் வில்டர், மீண்டும் அச்சுறுத்தும் கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
குத்துச்சண்டை போட்டி ஒன்றின் போது ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்று அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
சர்ச்சைக்குரிய இந்த கருத்தை தொடர்ந்தும் ஆதரிக்கும் அவர், ‘உலகிலேயே போட்டி ஒன்றின் போது ஒருவரை கொலை செய்யவும், அந்த கொலைக்கு பணம் வழங்கவும் அனுமதிக்கப்படும் ஒரே போட்டி குத்துச் சண்டையே’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடமும் அவர் இந்த கருத்தை முன்வைத்த நிலையில், அவரை முன்னாள் குத்துச் சண்டை வீரர்கள் பலர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.