இலங்கை

குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் 56 பேர் கைது – புதிய சட்டதிட்டங்களை கொண்டுவர அரசு முஸ்தீபு !

 

குண்டுவெடிப்புக்களால் கொல்லப்பட்ட 290 பேரில் 204 பேர் மீதான மரண விசாரணைகள் முடிந்துள்ளன. 41 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை .

கொழும்பில் 89 சடலங்கள் மட்டக்களப்பில் நீர்கொழும்பில் 92 சடலங்கள் மட்டக்களப்பில் 23 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பெரும்பாலான சடலங்கள் சிதைந்த நிலையில் இருப்பதால் அவற்றை அடையாளம் காண முடியவில்லை .

இன்று சம்பவங்கள் நடந்த இடங்களுக்கு பாதுகாப்பமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ சென்று பார்வையிட்டார்.

ஜனாதிபதி இன்று தேசிய பாதுகாப்பு சபை – அமைச்சரவை கூட்டங்களை நடத்தினார்.
இதனைத்தவிர உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் குழு இன்று முஸ்லிம் அமைச்சர்கள் ரிசார்ட் – ஹக்கீம் – ஹலீம் – மற்றும் பைசர் முஸ்தபா எம் பி உட்பட்ட பிரமுகர்களை சந்தித்தது.

தேசிய பாதுகாப்பு கருதி எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து இங்கு விளக்கப்பட்டது. குறிப்பாக முஸ்லிம்கள் பெண்களின் ஆடை விவகாரத்தில் சில கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது – அது குறித்தான சில நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக பாதுகாப்பு தரப்பு இங்கு கூறியுள்ளது.

பிரதமர் சந்திப்பு !

பிரதமர் ரணில் இராஜதந்திரிகளை சந்தித்தார். இலங்கையின் நிலைவரம் குறித்து அவர் விளக்கமளித்தார்.

31 வெளிநாட்டு பிரஜைகள் கொல்லப்பட்டமைக்கு கவலை வெளியிட்ட பிரதமர் , இந்தியர்கள் 8 பேர் ,பிரிட்டன் ,சீனா -01 , சவூதி அரேபியா -01 துருக்கி ,பிரான்ஸ், ஜப்பான், நெதர்லாந்து,போர்த்துக்கல், பங்களாதேஷ் , ஸ்பெய்ன் ,ஆகிய நாடுகளின் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதையும் சொன்னார்.

சம்பவங்கள் தொடர்பில் 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் கைதாவரென சொல்லப்படுகிறது.