இலங்கை

குண்டுவெடிப்பில் எப்படி தப்பினேன் ? – விபரித்தார் சஹ்ரானின் மனைவி சாதியா !

சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படித் தப்பினார் என்பது பற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது தாதியர்களிடம் விபரித்துள்ளார் தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவரும் தற்கொலைதாரியுமான சஹ்ரானின் மனைவி சாதியா.

அதேசமயம் விசாரணையாளர்களிடம் சஹ்ரான் மற்றும் அவரது செயற்பாடுகள் குறித்து கடுமையாக விமரிசித்துள்ள சாதியா , அவருடன் பழகிய நண்பர்கள் பற்றி தெரிவித்திருப்பதுடன் மற்றும் அவர் இப்படியான தாக்குதலுக்கு ஏன் அவசரப்பட்டார் என்பது குறித்து அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார்.

சஹ்ரானுடன் பழகிய அரசியல்வாதிகள் யார் என்பது குறித்து விசாரிக்கப்பட்டதாக சி ஐ டி வட்டாரங்கள் தெரிவித்தன.

சாய்ந்தமருதில் குண்டுவெடிப்பில் தப்பியது எவ்வாறு என்பது குறித்து அவரிடம் விசாரித்த பொலிஸ் சாதியா இறுதியாக பாவித்த தொலைபேசி விபரங்களை ஆய்வுக்குட்படுத்தியுள்ளனர்.