இலங்கை

“குடும்ப அலுவல் ஒன்றுக்கே அமெரிக்கா வந்தேன்” – சொல்கிறார் கோட்டா !

அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்யும் எந்த செயற்பாட்டையும் வொஷிங்ரனில் செய்யவில்லையென்கிறார் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச.

“அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்யும் விண்ணப்பத்தை வொஷிங்ரனில் நீங்கள் சமர்ப்பித்து விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளனவே?.. அவை உண்மைதானா என்று “ தமிழன் ” செய்திச் சேவை வினவியது.

“ நான் தனிப்பட்ட குடும்ப அலுவல் ஒன்றுக்காகவே வந்துள்ளேன்.அப்படியான ஏதும் நடக்கவில்லை. அந்த செய்திகள் தவறானவை..” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் கோட்டா..