உலகம்

குடியுரிமை கோரிக்கை – பின்வாங்கும் ட்ரம்ப்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், 2020 அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு வினாத்தாளில் குடியுரிமை குறித்த கேள்வியைச் சேர்க்க போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
அதற்கு பதிலாக, அரசாங்க நிறுவனங்களுக்கான நிர்வாக உத்தரவு மூலம் தகவல்களைப் பெறுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக அவர் கூறினார்.
நீதிமன்றத்தின் ஊடாக சவால்கள் விடுவிக்கப்படுவால், மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமதப்படும் என்பதால், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே ‘நாங்கள் எந்த ஒரு கல்லையும் திருப்பப்போவதில்லை’ என்று டிரம்ப் கூறியுள்ளார்.
குடிசன தொகை மதிப்பீட்டில், மக்களது குடியுரிமை தொடர்பான கேள்வியைச் சேர்ப்பது தொடர்பாக ஜூன் மாதத்தில் உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தநிலையில், நீண்ட போராட்டத்தில் இருந்து ட்ரம்ப் பின்வாங்குகிறார்.
ஆனாலும், ‘அமெரிக்க மக்களின் குடியுரிமை நிலையை நிர்ணயிப்பதற்கான எங்களது முயற்சியில் நாங்கள் பின்வாங்கவில்லை’ என்று அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.