Breaking News

குசல் பிணையில் விடுதலை: விபத்து இடம்பெற்ற போது வாகனத்தில் அவருடன் இருந்தவர் தொடர்பில் தகவல் வௌியானது

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குசல் மெண்டிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை நீதவான் நீதிமன்றில் அவரை முன்னிலைப்படுத்தியபோதே, 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணையில்  செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

நேற்று (05) பானந்தறை ஹோரேதுடுவ பகுதியில் வைத்து குசல் மெண்டிஸின் வாகனத்தில் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பானந்தறை ஹோரேதுடுவ பகுதியில் நேற்று அதிகாலையில் இடம்பெற்ற குறித்த விபத்தில் காயமடைந்த 64 வயதுடைய நபர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விபத்து இடம்பெற்ற ஒரு மணித்தியாலத்திற்குப் பின்பு குசல் மெண்டிஸ் பாணந்தறை வடக்கு பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளதுடன், விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பிரனாண்து குசல் மென்டிஸுடன் அவரின் வாகனத்தில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.