விளையாட்டு

குசல் ஜனித் பெரேராவிற்கு வாய்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கைக் குழாமில், ஆறு மாதங்களின் பின்னர் குசல் ஜனித் பெரேரா இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

திமுத் கருணாரத்ன தலைமையிலான குழாத்தில் 16 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

நட்சத்திர துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேரா காயம் காரணமாக ஓய்வில் உள்ள நிலையில், அவரது பெயர் அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் இடம்பெற்றுள்ளது.

கடந்த வருடம் ஓகஷ்ட் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் பின்னர் குசல்  பெரேரா இலங்கை டெஸ்ட் அணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.

அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தில் முன்னாள் அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ், குசல் மென்டிஸ், தினேஸ் சந்திமல், தனஞ்சய டி சில்வா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

எனினும் டெஸ்ட் போட்டிகளில் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி வரும், லஹிரு திரிமான்ன அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 19ஆம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

அதற்கு முன்னதாக இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவர் அணியும் இங்கிலாந்தும்  நான்கு நாள் கொண்ட பயிற்சி போட்டியில் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.