Breaking News

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக மன்சூர் தொடர்ந்தும் கடமையாற்ற நீதிமன்றம் அனுமதி

 

(றிஸ்வான் சாலிஹூ)

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக m.k.m.மன்சூர் தொடர்ந்தும் கடமையாற்ற முடியும் என திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று (01) தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா , கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவி செயலாளராக கடமையாற்றிய எம்.ரீ.எம்.நிசாமை மாகாண கல்விப் பணிப்பாளராக நியமித்திருந்தார்.

குறித்த நியமனத்திற்கு எதிராக மன்சூரினால் திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

இச்சந்தர்ப்பத்தில் இன்று (01) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி , தொடர்ந்தும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக மன்சூர் கடமையாற்றலாமென தீர்ப்பளித்துள்ளார்.

அரசியல் யாப்பின் 13ம் திருத்தத்திற்கு அமைய ஆளுநருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தினை மீறி செயற்பட்டுள்ளார் என்பதுடன், தனது சொந்த விருப்பு வெறுப்பினை நிறைவேற்ற தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார் எனவும், இது இயற்கை நீதிக் கோட்பாட்டுக்கு முரணானது எனவும் உள்நாட்டு வெளிநாட்டு தீர்ப்புகளை உதாரணம் காட்டி நீதிபதி மன்றில் தெளிவுபடுத்தினார்.