இலங்கை

கிழக்கில் உருவாகிறது புதிய முஸ்லிம் அரசியல் கூட்டணி !

கிழக்கு மாகாணத்தில் புதிய முஸ்லிம் அரசியல் கூட்டணியொன்று அமைவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

முக்கிய அரசியல் புள்ளிகளை உள்ளடக்கி அமையவுள்ள இந்த அரசியல் கூட்டணி இன்னும் சில வாரங்களுக்குள் பகிரங்கமாக அறிவிக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது.

முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுடனும் இதுபற்றி பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.