Breaking News

கிளிநொச்சி ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

கிளிநொச்சி இரணைமடுசந்தியில் இன்றிரவு இடம்பெற்ற இரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரணைமடு பகுதியை சேர்ந்த இராசேந்திரம் எனும் 62 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்தவராவர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த இரவு நேர தபால் இரயிலேயே இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இரயில் பயணம் தாமதமடைந்த்துடன் சடலத்தை மீட்ட இரயில்வே அதிகாரிக்கள் சடலத்தை அடுத்த புகையிரத நிலையத்தில் ஒப்படைத்து சென்றனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.