Breaking News

கிளிநொச்சியில் இராணுவ வாகனம் – ரயில் மோதி விபத்து – ஐவர் பலி – மூவர் காயம் !

 

கிளிநொச்சி – முறிகண்டி ரயில் நிலையங்களுக்கு இடையில் யாழ்தேவி ரயிலில் இராணுவ வாகனம் மோதி விபத்து.

இராணுவ சிப்பாய்கள் 5பேர் பலி. மூன்று பேர் படுகாயம் -ஒருவர் ஆபத்தான நிலையில்.

 

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மதிய நேர கடுகதி புகையிரதத்தில் ஏ9 வீதியிலிருந்து பாரதிபுரம் நோக்கி பயணித்து இராணுவத்தின் மருத்துவப் பிரிவின் ஹன்ரர் ரக வாகனம் மோதியிதில் இந்த விபத்து  ஏற்பட்டுள்ளது.

புகையிரதம்  அருகில் வருவதனை அவதானிக்காத இராணுவ சாரதி புகையிரத பாதையினை கடக்க முற்பட்ட போதே புகையிரதத்துடன் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த புகையிரத கடவையானது பாதுகாப்பற்ற புகையிரத கடவையாகும். இதற்கு முன்னரும் இரண்டு விபத்துக்களில் மூவர் பலியாகியிருந்தனர். இது மூன்றாவது விபத்து.

இறந்த இராணுவத்தினரின் உடல்கள் இராணுவத்தினரால் எடுத்துச் செல்லப்பட்டதோடு, மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.