Breaking News

கிரிந்த கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு – ஒருவர் உயிருக்கு போராட்டம் !

 

கிரிந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்ஸமாராம கிரிந்த கடலில் நீராடசென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் பலியாகியுள்ளதாக கிரிந்த பொலிஸார் தெரிவித்தனர். தாயார் உயிருக்காக போராடி ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் ஹட்டன் பகுதியை சேர்நதவர்கள் எனவும் உயிரிழந்தவரின் மனைவி நுவரெலியா சம்பத் வங்கியில் பணிபுரிந்து
வருவதாகவும் கடந்த வெள்ளிக்கிழமை நுவரெலியா சம்பத் வங்கியில் பணிபுரியும்குழுவினரோடு யால பகுதிக்கு இவர்கள் சுற்றுலா சென்றதாக உறவினர்கள்தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் பலியானவர்கள் ஹட்டனை சேர்ந்த
ருவான் விஜேசூரிய, சகாலா ( வயது 08)
நதீஷா ( 05 வயது ) ஆகியோராவர்.

தெபரவவ வைத்தியசாலையின் சிகிச்சை
பிரிவில் அனுமதிக்கபட்ட தாய் மேலதிக சிகிச்சைக்காக தெபரவவ வைத்தியசாலையில் இருந்து அம்பாறை வைத்தியசாலைக்கு ஹெலிகொப்ரரில் கொண்டு செல்லபட்டுள்ளதாகவும் அம்பாறை வைத்தியசாலையில் அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிரிந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது