உலகம்

கிம்மை நம்பும் ட்ரம்ப்

வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் மீது இன்னும் நம்பிக்கை வைத்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தமது டுவிட்டர் பதவிவொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
‘வடகொரியா சில சிறிய ஆயுதங்களை பரிசோதித்துள்ளது.
அது என்னுடன் சேர்ந்த சிலரையும், ஏனையோரையும் பாதித்துள்ள போதும், என்னைப் பாதிக்கவில்லை.
கிம் எனக்கு வழங்கிய உறுதிமொழிகளை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது.
அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜோ பைடன் தகுதி அற்றவர் என்று வடகொரியா தெரிவித்திருந்த கருத்து, தமக்கு ஒரு சமிக்ஞையை அனுப்புவதாக தெரிகிறது’ என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.