இலங்கை

கினிகத்தேனையில் சந்தேகத்திற்கிடமான பாரவூர்தியை அதிரடியாக மீட்ட படையினர் !

 

 

கினிகத்தேனை, அம்பகமுவ பகுதியில் இரண்டு நாட்களாக நிறுத்திவைக்கபட்டிருந்த பாரவூர்தி ஒன்று விசேட அதிரடிப்படையால் இன்று மீட்கப்பட்டது.

சந்தேகத்திகிடமான முறையில் 21 ம் திகதி முதல் நிறுத்தி வைக்கபட்டிருந்த பாரவூர்தி தொடர்பில் பிரதேசமக்களால் ,கினிகத்தேன பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு மஸ்கெலியா விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டனர்

விசேட அதிரடிப்படையினர் பாரவூர்தியின் கதவினை உடைத்து பரிசோதித்த போது – சந்தேகத்துக்கு இடமாக ஒன்றும் இருக்கவில்லையெனவும் பாரவூர்தியில் ஒலிபெருக்கி சாதனங்கள் என்பன இருந்தமையும்
தெரியவந்துள்ளது

மீட்கபட்டபாரவூர்தியின் உரிமையாளர் இனங்காணப்படவில்லை. கினிகத்தேன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

( நோட்டன் பிரிஜ் நிருபர் )