விளையாட்டு

கிண்ணம் வென்றது இலங்கை

மூன்றாவது ஒருநாள் போட்டியில் அசத்திய இலங்கை அணி, 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து தொடரை 3–0 என முழுமையாக கைப்பற்றி கிண்ணத்தை  வென்றது. பங்களாதேஷ்  அணி ‘ஹட்ரிக்’ தோல்வியடைந்தது.
இலங்கை, பங்களாதேஷ் அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டி கொழும்பில் நடந்தது. முதலில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய  இலங்கை அணியில்  அவிஷ்க பெர்ணான்டோ (6) பெரிதாக சோபிக்கவில்லை . அணித்தலைவர்  திமுத் கருணாரத்ன (46), குசல் பெரேரா (42) நம்பிக்கை அளித்தனர். பொறுப்பாக ஆடிய குசல் மெண்டிஸ் (54) அரைசதம் கடந்தார். ஷபியுல் இஸ்லாம் பந்தில் ஷாணக்க  (30), ஷெஹன் ஜெயசூர்ய (13) அவுட்டாகினர். அபாரமாக விளையாடிய  மத்யூஸ் (87) தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார்.
இலங்கை அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 294 ரன்கள் எடுத்தது. ஹசரங்க டி சில்வா (12) அவுட்டாகாமல் இருந்தார். வங்கதேசம் சார்பில் ஷமியுல் இஸ்லாம், சவுமியா சர்கார் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
சவாலான இலக்கை விரட்டிய பங்களாதேஷ் அணியின்  கெப்டன் தமிம் இக்பால் (2), அனாமுல் ஹக் (14)
 முஷ்பிகுர் ரஹிம் (10), முகமது மிதுன் (4), மகமதுல்லா (9) குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர் .பொறுப்பாக ஆடிய  சர்கார் அரைசதம் கடந்தார்.
 பங்களாதேஷ் அணி 36 ஓவரில், 172 ரன்களுக்கு அணைத்து விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.