Breaking News

காலி மீன்பிடி துறைமுகத்தில் தீயை அணைக்க கடற்படை உதவி !

 

காலி மீன்பிடி துறைமுகத்தில் திருத்த வேலைகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தை கடற்படையினரும் காலி தீயணைப்புப் படையினரும் நேற்று கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. மேலதிக விசாரணைகள் காலி துறைமுக பொலிஸாரால் மேற்கொள்ளப்படுகின்றன.