Breaking News

காலியில் கைது செய்யப்பட்டவர் பயங்கரவாத புலனாய்வு பிரிவிடம் ஒப்படைப்பு !

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் காலியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர், மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் .

காலியின் தனிபொல்கஹாவில் வசிக்கும் முகமது காதர் முகமது ஷஸ்னி, 29, தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரானுடன் நேரடியாக தொடர்பு கொண்டிருந்தார் என்றும், இஸ்லாமிய தேசத்திற்காக தனது உயிரைத் தியாகம் செய்ய சஹ்ரான் முன் சத்தியம் செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர் பியகமவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து  ஆங்கில வகுப்புகளை நடத்தியிருந்தார்.

ஏப்ரல் 29 ஆம் தேதி கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் மஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு 90 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.