விளையாட்டு

காலநிலையை குற்றம் சொல்லும் ஜொக்கோவிக்

 

ஃப்ரென்ச் ஓபன் டென்னீஸ் தொடரின் அரையிறுதி போட்டியில் நவோக் ஜொக்கோவிக், டொமினிக் தீமிடம் தோல்வி அடைந்தார்.

இதன்மூலம் இரண்டு தடவைகள் அடுத்தடுத்து நான்கு க்ராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்றவர் என்ற சாதனையை படைக்க ஜொக்கோவிக்கால் முடியாமல் போனது.

இந்த போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எனினும் கடும் மழை மற்றும் காற்றின் காரணமாக போட்டி மூன்று தடவைகள் பிற்போடப்பட்டு நேற்றையதினமே நிறைவடைந்தது.

இதனால் தமது விளையாட்டுத்திறனை முழுமையாக காண்பிக்க முடியவில்லை என்று ஜொக்கோவிக் தெரிவித்துள்ளார்.