இலங்கை

காரைதீவு பிரதேச மதுக்கடைகளை அகற்ற மாணவர்கள் கோரிக்கை

சர்வதேச புகைத்தல் போதைப்பொருள் ஒழிப்பு நாளான இன்று,காரைதீவு பிரதேச செயலாளரூடாக காரைதீவு பிரதேசத்தில் இருக்கும் மதுக்கடை அகற்ற வேண்டும் என்றகோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்து மகஜர் கையளிக்கப்பட்டது.

தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவன் சி.திரிமாறன் ஏற்றபாட்டில் காரைதீவிலுள்ள பாடசாலை மாணவர்கள் கையொப்பமிட்டு இந்த மகஜரை அதிபர் ஆசிரியர் மூலமாக பிரதேச செயலாளரிடம் கையளித்தனர்

தந்தையின் மதுபாவனையால் மன அழுத்தத்திற்கு உட்பட்ட மாணவன் கடந்த வருடம் தமிழ்நாட்டில் தற்கொலை செய்துகொண்டார் .

தனது மரணத்தின் பின்னராவது தந்தை மதுபாவனையை நிறுத்தவேண்டும் என்றும்,மத்திய மாநில அரசு மதுக்கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தான் ஆவியாக வந்து மதுபானக்கடையை மூடுவேன் என்றும் கடிதம் எழுதிவிட்டே அந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.

அந்த மாணவனின் நினைவு சுமந்து அவனின் புகைப்படம் தாங்கிய பதாகையுடன் புகைத்தல் மதுபோதை ஒழிப்புநாளன இன்று,காரைதீவு பிரதேசத்தில் இருக்கின்ற மதுக்கடையால் தமது கல்வி பாதிக்கிறது என்றும் தாமும் தமது குடும்பமும் சமுக பொருளதார உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவதாகவும் ஆகவே தமது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஜனாதிபதி காரைதீவிலுள்ள மதுக்கடையை அகற்ற வேண்டுமெனவும் குறிப்பிட்டு,நாட்டின் நிலவும் அசாதாரண சூழலால் மாணவர்கள் வெளியே வரமுடியாத காரணத்தால் மாணவர்களால் கையொப்பமிடப்பட்ட மகஜர் பாடசாலை அதிபர் ஆசிரியரூடாக கையளிக்கப்பட்டது.