விளையாட்டு

காயத்தில் இருந்து மீண்ட வார்னர் அதிரடி சதம்

ஆஸ்திரேலியாவின் நியூசெüத் வேல்ஸ் பகுதியில் நடைபெற்ற ப்ரீமியர் கிரிக்கெட் லீக் போட்டி ஒன்றில் காயத்தில் இருந்து மீண்ட டேவிட் வார்னர் 77 பந்துகளில் 110 ரன்ளை விளாசினார்.
கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பந்தை உப்புகாகிதம் கொண்டு சேதப்படுத்தியதாக எழுந்த புகாரை அடுத்து ஸ்மித், வார்னருக்கு ஓராண்டும் பேங்கிராப்ட்டுக்கு 9 மாதங்களும் தடை விதிக்கப்பட்டது. வரும் 29-ஆம் தேதி தடைக்காலம் நீங்குகிறது. இதற்கிடையே லீக் ஆட்டங்களில் ஆட ஸ்மித், வார்னருக்கு சிஏ அனுமதி அளித்தது. அதில் இருவரும் ஆடிய போது, முழங்கையில் காயமடைந்தனர்.
இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்ட வார்னர். ரான்ட்விக்-பீட்டர்ஷாம் அணிக்காக சனிக்கிழமை ஆடிய போது, 110 ரன்களை விளாசி சதமடித்தார். இதனால் உலகக் கோப்பைக்கான ஆஸி. அணியில் வார்னர் இடம் பெறலாம் எனத் தெரிகிறது.
ஸ்மித், வார்னர் வருகையில் ஆஸி. அணி மீண்டும் பழைய வலிமையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது