உலகம்

காப்புரிமை பெற்றார் கிரேட்டா தன்பேர்க்சுற்றுச்சுழல் பாதுகாப்பு குறித்து தொடர்ந்தும் குரல் எழுப்பி வரும் உலகின் இளம் செயற்பாட்டாளராக கிரேட்டா தன்பெர்க் தனது பெயரையும் தனது அமைப்பpன் பெயரையும்  காப்புரிமை ஊடாக பதிவு செய்துள்ளார்.

இதற்கமைய, ‘ #FridaysForFuture, #GretaThunberg ” ஆகிய பெயர்களுக்கு அவர் காப்புரிமை செய்துள்ளார்.

தனது பெயரும் தனது அமைப்பின் பெயரும்இ  தொடர்ந்தும் விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதால் வேறுவழியின்றி காப்புரிமையை பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த அமைப்பானது நல்ல நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும், இந்த அமைப்பு நல்ல நோக்கத்திற்காக மாத்திரமே பயன்படுத்தப்பட வேண்டும். எனினும் தனிப்பட்ட தேவைகளுக்காகவும், வியாபாரத்திற்காகவும் பயன்படுத்தப்படுவதை தான் விரும்பவில்லை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த 16 வயதான கிரேட்டா தன்பேர்க் ஐக்கிய நாடுகள் சபையில் உலகத் தலைவர்களைக் கேள்வி எழுப்பி ஆற்றிய உரை மிகப் பிரபலமானதென்பது குறிப்பிடத்தக்கது