Breaking News

காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட 63 பேருக்கு தொடர்ந்து விளக்கமறியல் !

 

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 63 பேருக்கும் தொடர்ந்து எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று வியாழக்கிழமை (24) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. றிஸ்வான் உத்தரவிட்டார்.

ஏப்ரல் தாக்குதல் சம்பவத்தையடுத்து சஹ்ரானின் ஊரான காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 64 பேரை அம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற மற்றும் அந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் போலீசார் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட 64 பேரும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 63 பேரும் இன்று வியாழக்கிழமை (24); நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டு நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 07 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

–கனகராசா சரவணன்-