விளையாட்டு

காதலியைக் கரம் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர்!

இந்திய கிரிக்கெட் வீரரும் ஹைதராபாத் ஐபிஎல் அணியைச் சேர்ந்தவருமான சித்தார்த் கெளல் சமீபத்தில் தனது காதலியைத் திருமணம் செய்துகொண்டார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு ஒருநாள் ஆட்டங்களில் இந்திய அணியில் இடம்பிடித்த கெளல், ஹர்சிம்ரன் கெளரை கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தார். இந்நிலையில் அவரைச் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து நான்காவது ஒருநாள் ஆட்டத்துக்காக மொஹலி வந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள், கெளலை நேரில் சந்தித்து திருமண வாழ்த்துகளை அளித்தார்கள். இந்திய வீரர்களுக்குத் தனது வீட்டில் விருந்து அளித்தார் கெளல்.

சித்தார்த் கெளல், இந்திய அணிக்காக தலா 3 ஒருநாள், டி20 ஆட்டங்களில்