இலங்கை

காணி விடுவிப்பை ஆராய முப்படைத்தளதிபதிகளுடன் யாழ் செல்கிறார் பாதுகாப்பு செயலர் !

முப்படைத்தளபதிகள் சகிதம் யாழ்ப்பாணத்திற்கு அடுத்த வாரம் செல்கிறார் பாதுகாப்பமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ.

காணி விடுவிப்பு சம்பந்தமாக ஆராயும் முக்கிய கூட்டமொன்று எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பமைச்சின் செயலாளர் தலைமையில் நடைபெறவுள்ளது.அத்துடன் விடுவிக்கப்படவேண்டிய காணிகள் இருக்கும் இடங்களை தளபதிகளுடன் பாதுகாப்பமைச்சின் செயலர் நேரடியாகவே சென்று பார்வையிடுவார்.

சுமார் 90 வீதமான தனியார் காணிகளும் 84 வீதமான அரச காணிகளும் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டதாக சொல்லப்படும் நிலையில் வடக்கு ஆளுனருடன் இதுபற்றி செயலர் ஹேமசிறி விரிவாக பேசுவாரென தெரிகிறது.

அதேசமயம் சில இடங்களில் உள்ள காணிகளை விடுவிக்க பாதுகாப்புக் காரணங்களால் படையினர் மறுத்து வருவது குறித்தும் இந்த இரு நாட்களில் ஆராயப்படவுள்ளது .மாவட்டத்தின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த பேச்சுக்களுக்கு அழைக்கப்படவுள்ளனர் .