இலங்கை

காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் மாநாடு !

 

வடக்கின் நில விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (28) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, பாதுகாப்பு பதவிநிலை பிரதானி, முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்புத் துறை பிரதானிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.