இலங்கை

காணி வழங்க மறுத்தார் நவீன் – அமைச்சரவையில் எதிர்த்தார் மனோ !

 

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடுகள் அமைக்கப்படுகின்ற காணிகளை சொந்தமாக வழங்காமல், 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட வேண்டும் என்ற யோசனை ஒன்று பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்கவினால் இன்று முன்வைக்கப்பட்டது.

ஆனால் அந்த யோசனையை அமைச்சர்களான மனோகணேசன் மற்றும் கயந்த கருணாதிலக ஆகியோர் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

பெருந்தோட்ட மக்கள் இரண்டாம்தர மக்களாக பார்க்கப்படக் கூடாது என்று அமைச்சர் மனோ வாதிட்டார்.

பின்னர் திகாம்பரம் அமைச்சரின் அமைச்சினால் முன்வைக்கப்பட்டிருந்த குறிப்பு ஒன்றை அடிப்படையாக வைத்து அந்த யோசனை திருத்தப்பட்டு, சொந்தமாக காணிகள் வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சரவை தீர்மானித்தது.

அதேநேரம் தபால் ஊழியர்களின் பிரச்சினை குறித்தும் இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது அமைச்சர் ஹலீம், எதிர்வரும் திங்கட்கிழமை இந்த விடயம் குறித்து சம்மந்தப்பட்டவர்களுடன் பேசி, செவ்வாய்க்கிழமை இடம்பெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் யோசனை முன்வைப்பதாக கூறினார்.