Breaking News

காசல்ரியில் பாரிய மண்சரிவு – நோட்டன் அட்டன் வீதி போக்குவரத்து தடை

நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நோட்டன் பிரதான வீதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்மையினால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்

தொடந்து பெய்து வரும் கடும் மழையினால் 13/08 பிற்பகல் 04 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது

காசல்ரி குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் குடியிருப்பொன்று சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புகளும் தடைப்பட்டுள்ளன

மண்சரிவினால் நோட்டன் லக்சபான ஒஸ்போன் பகுதிக்கான போக்குவரத்து தடைப்படுள்ளதுடன் வீதியில் சரிந்து கிடக்கும் மண்மேட்டை அகற்றும் நடவடிக்கையில் நோட்டன் பொலிஸ் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்களும் ஈடுபடவுள்ளதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

– நோட்டன் பிரிட்ஜ் நிருபர் –