உலகம்

கவனக்குறைவால் ட்ரம்பின் திட்டம் கசிந்தது.

 

அமெரிக்காவிற்கும் மெக்சிகோவிற்கும் இடையில் சட்டவிரோத குடியேறிகளை கட்டுப்படுத்துவதற்கான இணக்கப்பாடு ஒன்று அண்மையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.

இதற்கான ஒப்பந்தம் இரகசியமாக பேணப்படுகிறது.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், தமது கையில் இருக்கும் காகிதம் ஒன்றை காட்டி, மெக்சிகோவுடனான ஒப்பந்தம் இதில் எழுதப்பட்டிருப்பதாகவும், எனினும் இதனை தற்போது அறிவிக்கப்போவதில்லை என்றும் கூறினார்.

எனினும் குறித்த காகிதத்தை புகைப்படம் எடுத்த ஊடகங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்த திட்டத்தை கசியவிட்டுள்ளன.

இதன்படி அமெரிக்க எல்லையில் ஏதிலிகள் மத்தியநிலையம் ஒன்று அமைக்கப்பட்டு, சட்டவிரோத குடியேறிகளது விடயங்கள் கையாளப்படவிருப்பதாக அறியமுடிகிறது.