Breaking News

களுபோவிலை வைத்தியசாலையில் வார்ட் மூடப்பட்டது – ரிகில்லகஸ்கடயில் வைத்தியர் ஒருவருக்கு கொரோனா

 

கண்டி, ரிகில்லகஸ்கட பிரதேச ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அந்த வைத்தியசாலையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வைத்தியசாலையில் பணி புரியும் வைத்தியர் ஒருவர் கடந்த சனிக்கிழமை பேலியகொட சந்தை கட்டடத்தொகுதிக்கு சென்றுள்ளதோடு அவர் கடந்த திங்கட்கிழமை மீண்டும் பணிக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர் பணியாற்றிய பிரிவுகள் மூடப்பட்டுள்ளதோடு பி.சி.ஆர். பரிசோதனையும் முன்னெடுக்கபட்டுள்ளது.

இன்று வெளியான பி.சி.ஆர் அறிக்கையில் குறித்த வைத்தியருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்ப்ட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதானி வைத்தியர் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை களுபோவில வைத்தியசாலையின் 7 ஆம் இலக்க வார்ட் மூடப்பட்டது. அங்கு சிகிச்சை பெற வந்த நோயாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருந்த நிலையில் இது மூடப்பட்டது.பத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதற்கிடையில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலய முன்வீதியில் உள்ள தோட்டமொன்றில் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக தெரியவந்ததையடுத்து அவருடன் நெருங்கிப் பழகியோர் தனிமைப்படுத்தப்பட்டனர்.அந்த படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.